இளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரச்சினைகளுக்குள்ளான சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினரை கவனித்துக் கொள்ளும் பணியில் இருந்த ஒரு பெண்ணின் தவறான ஆசை, அவரது வேலைக்கே உலை வைத்துள்ளது.

Kayleigh Martin (26) தனது கண்காணிப்பில் இருந்த 16 வயது சிறுவனுடன் முறை தவறிய உறவில் ஈடுபட்டிருக்கிறார்.

சிறுவனின் நலன் கருதி அவனது பெயர் வெளியிடப்படவில்லை.

இதனால், ஸ்காட்லாந்திலுள்ள சிறுவர் காப்பகத்தில் பணி புரிந்து வந்த Kayleigh ஆறு மாதங்களுக்கு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது கடை ஒன்றில் Kayleigh பணி புரிந்தாலும், அந்த பணியிலிருந்து அவரை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அத்துடன் மீண்டும் Kayleigh காப்பக பணியில் ஈடுபடவே முடியாத அளவில் தடை விதிப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

Kayleighம் அந்த சிறுவனும், பிரச்சினைக்குள்ளான பதின்ம வயதினருக்கான இல்லம் ஒன்றில் சந்தித்திருக்கின்றனர்.

இருவரும் ஆபாசமான செய்திகளை பகிர்ந்து கொண்டுள்ளதோடு காப்பகத்திலேயே பாலுறவு செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

விடயம் அறிந்து அதிர்ந்துபோன காப்பக உரிமையாளர்கள் பொலிசாருக்கு தகவல் அளிக்க, பொலிசார் Kayleighஐ கைது செய்துள்ளனர்.

Kayleigh இரண்டாண்டுகள் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள ஷெரிஃப், 250 மணி நேரம் ஊதியமின்றி வேலை செய்ய வேண்டும் என்றும் Kayleighக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் பாலியல் குற்றவாளிகள் பட்டியலில் இரண்டாண்டுகளுக்கு Kayleighஇன் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதோடு, அந்த சிறுவனை சந்திக்க கூடாது என்றும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்