பக்கிங்காம் அரண்மனையில் தங்க ட்ரம்பிற்கு அனுமதி மறுப்பு

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவின் பக்கிங்காம் அரண்மனையில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் அங்கு தங்குவதற்கு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவருடைய மனைவிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வருகின்ற ஜூன் மாதம் 3 முதல் 5ம் திகதி வரை பிரித்தானியாவை சுற்றிப்பார்க்க இருப்பதாக பக்கிங்காம் அரண்மனை செய்தி வெளியிட்டுள்ளது.

அதிபர் டிரம்புடன் அவருடைய மனைவி மெலனியா டிரம்ப் வருகிறார். ராணியின் விருந்தினர்களாக வரவிருக்கும் இருவரும் போர்ட்ஸ்மவுத் பகுதியில் நடைபெறவிருக்கும் D-Day 75-வது ஆண்டு விழாவில் கலந்துகொள்வார்கள்.

ஜூலை 2018 ஆம் ஆண்டு ஒரு வேலை விடயமாக இங்கிலாந்து வந்த ட்ரம்ப், வின்ட்சர் கோட்டையில் ராணியை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போதைய சந்திப்பின் போது ட்ரம்ப் பக்கிங்காம் அரண்மனையில் அரண்மனையில் தங்க வைக்கப்பட மாட்டார் என செய்தி வெளியாகியிருக்கிறது.

இதற்கு முன்பு அரண்மனைக்கு வருகை தந்திருந்த அமெரிக்க அதிபர்கள் ஜார்ஜ் புஷ் மற்றும் ஒபாமா ஆகியோர் அரண்மனையில் தங்க வைக்கப்பட்டிருந்த போது, ட்ரம்பிற்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் அரண்மனையின் சில பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் அபாயத்தை, £ 365 மில்லியன் செலவில் மறுசீரமைக்கும் வேலைகள் நடைபெற்று கொண்டிருப்பதாலே, அதிபருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers