இலங்கை குண்டுவெடிப்பில் பெற்றோரை பறிகொடுத்து அனாதையாக தவிக்கும் பிரித்தானிய சிறுவன்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய தீயணைப்பு படையில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற வீரர், இலங்கைக்கு சுற்றுலா வந்த போது மனைவியுடன் சேர்ந்து வெடிகுண்டு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 290 பேர் பலியாகியிருப்பதோடு, 500க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் சிக்கி 8 பிரித்தானியர்களும் இறந்துள்ளனர். அந்த வகையில் பிரித்தானியாவை சேர்ந்த பில்லி ஹார்ப் (56), தீயணைப்பு துறையில் சேர்ந்து பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியிருக்கிறார்.

1996ம் ஆண்டு இங்கிலாந்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் இவர் முக்கிய பங்காற்றினார். அந்த சமயத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. மாறாக 200 பேர் படுகாயங்களும் மீட்கப்பட்டனர்.

இதில் பணியாற்றிய காரணத்தால் மிகவும் பிரபலமடைந்த பில்லி ஹார்ப், சமீபத்தில் தான் தீயணைப்பு துறையில் இருந்து ஓய்வு பெற்று அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்துள்ளார்.

விடுமுறையை கழிப்பதற்காக இலங்கைக்கு தன்னுடைய குடும்பத்துடன் வருகை தந்திருக்கிறார். இந்த சமயம் ஏற்பட்ட வெடிகுண்டு விபத்தில் தான், பில்லி ஹார்ப் மற்றும் அவருடைய மனைவி சாலி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

ஆனால் அவர்களது மகன் கவின் மட்டும் இதிலிருந்து தப்பி தற்போது இலங்கையில் தங்கியிருக்கிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்