இலங்கைக்கு செல்லும் பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை தகவல்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

அழகிய நாடானா இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பம் கொடூர வன்முறை என்றும் அந்நாட்டிற்கு சுற்றுலா செல்லும் பிரித்தானியர்கள் தற்போது அந்த பயணத்தை தவிர்க்க வேண்டும் என mirroruk பத்திரிகையின் பயண வழிகாட்டி nigelthompson தெரிவித்துள்ளார்.

2004 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட சுனாமி மற்றும் 10 ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டில் ஏற்பட்ட யுத்தம் ஆகியவற்றிற்கு பிறகு இலங்கை நாட்டின் சுற்றுலாத்துறை ஒரு புதிய மைல்கல்லை எட்டியது.

சுமார் 2.3 மில்லியன் சுற்றுலா பயணிகள் 2018 ஆம் ஆண்டில் இலங்கைக்கு சென்றுள்ளனர். இதில் 254,000 பேர் பிரித்தானியாவில் இருந்து சென்றவர்கள் ஆவார்.

தற்போது ஏற்பட்டுள்ள தொடர் குண்டுவெடிப்பால் பிரித்தானிய சுற்றுலாபயணிகள் குறுகிய காலத்திற்கு இலங்கை பயணத்தை தவிர்ப்பது நல்லது.

இலங்கை பயணம் மேற்கொள்வதற்கான ஆலோசனைகளை பிரித்தானிய வெளியுறத்துறை செயலகம் இதுவரை அறிவிக்கவில்லை, இருப்பினும் அங்கு சுற்றுலா செல்ல விரும்பும் பிரித்தானியர்கள் பயணத்தை ரத்து செய்வது அல்லது வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்வது நல்லது என nigelthompson தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்