இலங்கை குண்டு வெடிப்பில் மூன்று குழந்தைகளை இழந்த கோடீஸ்வரர்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் இளவரசர் சார்லசைவிட அதிக நிலம் வைத்திருக்கும் கோடீஸ்வரர் ஒருவரின் மூன்று பிள்ளைகள் இலங்கையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

டென்மார்க்கைச் சேர்ந்த Anders Holch Povlsen பிரித்தானியாவில் அதிக அளவு நிலம் வைத்திருக்கும் கோடீஸ்வரர்களில் ஒருவரும், Asos என்னும் ஆன்லைன் ஃபாஷன் மற்றும் அழகுப்பொருட்கள் நிறுவனத்தின் உரிமையாளரும் ஆவார்.

Anders மற்றும் அவரது மனைவி Anne Storm இருவருக்கும் Alma, Astrid, Agnes மற்றும் Alfred என்ற நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

அந்த நால்வரில் இலங்கையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் மூன்று பிள்ளைகள் இறந்து போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளதேயொழிய எந்த மூன்று பேர் இறந்தார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

பிள்ளைகள் உயிரிழப்பதற்கு சில நாட்கள் முன்புதான் அவர்களில் ஒருவரான Alma, சுற்றுலா சென்றிருந்தபோது நீச்சல்குளம் ஒன்றின் அருகே தனது உடன்பிறந்தோருடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் பிரித்தானியாவுக்கான இலங்கை உயர் ஆணையரான மனிஷா குணசேகரா, மொத்தத்தில் 32 வெளிநாட்டவர்கள் குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களில் எட்டு பேர் பிரித்தானியர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்