பிரசவ நேரத்தை நெருங்கிய மேகன்: பிரித்தானியா வந்தடைந்தார் டோரியா!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

இளவரசி மேகனுக்கு குழந்தை பிறக்கவிருக்கும் நேரத்தில் அதனை காண்பதற்காக அவருடைய தாய் டோரியா பிரித்தானியாவிற்கு வந்தடைந்திருப்பது பொதுமக்களுக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்ப்பிணியாக இருக்கும் பிரித்தானிய இளவரசி மேகன் ஏப்ரல் மாதத்திற்குள் குழந்தை பெற்றெடுத்திடுவார் என செய்திகள் வெளியாகிய வண்ணமே உள்ளன.

இந்த நிலையில் மகளுக்கு பிறக்கவிருக்கும் பேரக்குழந்தையை பார்ப்பதற்காக அவருடைய தாய் டோரியா ராக்லாண்ட் அமெரிக்காவிலிருந்து பிரித்தானியா வந்தடைந்திருக்கிறார்.

இதனால் மேகனுக்கு விரைவில் குழந்தை பிறக்கலாம் என பொதுமக்கள் அனைவரும் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

அதோடு மட்டுமில்லாமல் யோகா வகுப்பிற்கு டோரியா விடுமுறை அளித்திருப்பதாக அவருடைய மாணவர்கள் கூறியுள்ளனர்.

மகளை விட்டு நீண்ட தூரத்தில் இருப்பதை நினைத்து டோரியா அடிக்கடி கவலை கொண்டுள்ளார். ஆனால் தற்போது மகளின் முக்கியமான நிகழ்வில் உடனிருப்பதற்காக வருகை தந்துள்ளார்.

மேலும், தன்னுடைய புதிய வீட்டை தாயிடம் காண்பிக்க வேண்டும் எனவும், அவருடன் மகிழ்ச்சியாக அங்கு பொழுதை கழிக்கவும் மேகன் விரும்பியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்