இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்: பிரித்தானியர் உட்பட 35 வெளிநாட்டவர்கள் பலி!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

இலங்கை குண்டு வெடிப்பு தாக்குதலில் இங்கிலாந்து, அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் போர்த்துக்கல் நாட்டிலிருந்து வந்த சுற்றுலாபயணிகள் 35 பேர் பலியாகியிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தை கொண்டாடும் விதமாக கிறிஸ்தவ மக்கள் அனைவரும் குழுமியிருந்த 3 ஆலயங்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த 3 முக்கியமான ஹோட்டல்களில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

இந்த சம்பவத்தில் தற்போது வரை 150க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதோடு, 300க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் பிரித்தானியர்கள் உட்பட வெளிநாடுகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளும் பலியாகியிருந்ததாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் பிரித்தானியா, அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் போர்த்துக்கல் ஆகிய நாடுகளில் இருந்து வந்த சுற்றுப்பா பயணிகள் 35 பேர் பலியாகியிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது Dehiwala-வில் மிருகக்காட்சி சாலை அருகே உள்ள வரவேற்பு மண்டபம் மற்றும் டெமடகோடா (Dematagoda) என்ற இடத்தில் தாக்குதல் நடைபெற்றிருப்பதாகவும், அதில் 2 பேர் உயிரிழந்திருப்பதாகவும் செய்தி வெளியாகியிருக்கிறது.

அடுத்தடுத்து நடந்து வரும் இந்த தாக்குதலினால் இலங்கையில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் உலக மக்கள் அனைவரும் பெரும் பதற்றத்தில் இருந்து வருகின்றனர்.

பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு இலங்கை பாதுகாப்பு படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்