அரச குடும்பத்தின் மிகப்பெரிய நெறியை மீறிய வில்லியம் - கேட் தம்பதி!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் அவருடைய மனைவி கேட் கடந்த ஆண்டு ஈஸ்டர் விழாவின் போது, அரச நெறியை மீறியதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஈஸ்டர் விழாவை கொண்டாடுவதற்காக அரச குடும்பத்தினர் அனைவருமே ஒன்றாக பாரம்பரிய தேவாலயத்தில் கூடுவார்கள்.

நாளை நடைபெற உள்ள ஈஸ்டர் கொண்டாட்டத்தில் ராணி, கேட், வில்லியம் மற்றும் யூஜின் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்த நிகழ்வில் ஹரி மற்றும் அவருடைய மனைவி மேகன் மட்டும் கலந்துகொள்ள மாட்டர்கள். இன்னும் சில தினங்களில் தம்பதியினருக்கு முதல் குழந்தை பிறக்க உள்ள காரணத்தினாலே அவர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் என தெரியவந்துள்ளது.

இதேபோன்று கடந்த ஆண்டு ஜார்ஜ் சேப்பலில் நடைபெற்ற ஈஸ்டர் விழாவில், இளவரசர் வில்லியம் மற்றும் அவருடைய மனைவி கேட் தாமதமாக வருகை தந்தனர்.

ஆனால் அது அவர்களுடைய தவறு அல்ல. வரும் வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாலே அவர்கள் தாமதமாக வந்து சேர்ந்தனர். இதற்கிடையில் ராணி ஜார்ஜ் சேப்பலிற்கு வந்து சேர்ந்தார்.

அரச விதியை பொறுத்தவரை ராணிக்கு முன்பே அனைவரும் வந்து சேர்ந்துவிட வேண்டும். அப்படி வர தவறினால் அது மிகப்பெரிய நெறிமீறல் என கூறப்படுகிறது. அரச குடும்பத்தின் மிகவும் மூத்த உறுப்பினரானவர் எப்போதும் கடைசியாக வர வேண்டும் என்று நெறிமுறை கூறுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers