நம்பி வந்த இளம் பெண் நோயாளியை தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிரித்தானிய மருத்துவர்: நீதிமன்றம் அதிரடி

Report Print Balamanuvelan in பிரித்தானியா

தன்னை நம்பி சிகிச்சை பெற வந்த இளம்பெண்ணை தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த மருத்துவரை மருத்துவ கவுன்சிலிலிருந்தே நீக்கி அளிக்கப்பட்ட தீர்ப்பை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

வடக்கு லண்டனிலுள்ள தனது வீட்டிலுள்ள சிகிச்சை அறையில் வைத்து Michael Kern என்னும் அந்த பிரித்தானிய மருத்துவர் தொடர்ந்து அந்த பெண்ணுடன் பாலுறவு கொண்டு வந்துள்ளார்.

உடற்குறைபாடு கொண்ட அந்த இளம்பெண்ணின் குறைபாட்டை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட Michael Kern (62), அவரை தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.

நொந்துபோன அந்த பெண், 2017ஆம் ஆண்டு பொலிசாரிடம் புகாரளித்தார்.

அதையடுத்து அவர் மருத்துவ கவுன்சிலிலிருந்தே நீக்கப்பட்டார்.

தன் மீதான நடவடிக்கையை எதிர்த்து Michael மேல் முறையீடு செய்ய, மிகவும் புகழ் பெற்றவரான அவர்மீது மருத்துவ கவுன்சில் எடுத்துள்ள நடவடிக்கை மிகவும் அதிகம் என்று கூறினாலும், அவரை அகற்றியது சரிதான் என்று தீர்ப்பளித்துள்ளது.

ஒரு நோயாளியிடம் எல்லை மீறி பாலியல் உறவு வைத்துக் கொள்வது மருத்துவர்கள் மீது நோயாளிகள் வைக்கும் நம்பிக்கையையே உடைப்பதாகும் என்று கூறியுள்ள நீதிபதி, அவரை அகற்றியது சரியானதுதான் என்று தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்