திருமண மோதிரத்தால் துண்டான விரல்: புதுமண தம்பதிக்கு ஏற்பட்ட சோகம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவின் சேஷையர் பகுதியில் இளைஞர் ஒருவரின் மோதிரம் வேலியில் சிக்கிக் கொண்டதால், அவரது விரலே துண்டான சம்பவம் நடந்துள்ளது.

சேஷையரில் உள்ள Runcorn பகுதியில் குடியிருந்து வருபவர் 33 வயதான பால் பிக்ஸ். ராணுவத்தில் பணியாற்றிவரும் பால், கடந்த மார்ச் 31 ஆம் திகதி தமது மோதிர விரலை விபத்து ஒன்றில் இழந்துள்ளார்.

குடியிருப்பு அருகாமையில் அமைந்துள்ள வேலி மீதிருந்து குதித்த அவர், அந்த வேலியில் அவரது மோதிரம் சிக்கிக் கொண்டது மட்டுமின்றி, விரலும் துண்டாகியுள்ளது.

ஒரு நொடி அதிர்ச்சிக்குள்ளான பால், உடனடியாக துண்டான விரலை சிறிய பெட்டி ஒன்றில் சேகரித்து மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.

ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பாலின் விரலை இனி ஒன்றாக இணைக்க முடியாது என கூறியுள்ளனர்.

ஈராக், அப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று ராணுவ பணியாற்றிவந்த தாம் இதுவரை ஒரு சிறு காயம் கூட ஏற்படுத்துக் கொண்டதில்லை எனவும்,

ஆனால் பிரித்தானியாவுக்கு திரும்ப வந்து மிகவும் முட்டாள்த்தனமாக ஒரு முடிவால், தற்போது மோதிர விரலை இழந்து நிற்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 24 ஆம் திகதி திருமணத்தன்று அணிந்த மோதிரத்தை இதுவரை தாம் விரலில் இருந்து கழற்றியதே இல்லை என கூறும் பால்,

இந்த விவகாரத்தில் தமது மனைவிக்கு மிகுந்த வருத்தம் இருப்பதாகவும், அதுவும் மோதிர விரலில் விபத்து ஏற்பட்டது அவரால் தாங்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்