என் வீட்டருகே காரை நிறுத்தாதீர்கள்: அரண்மனை ஊழியர்களை எரிச்சலூட்டிய மேகன்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

அரண்மனை ஊழியர்கள் தங்கள் கார்களில் வருவதும் போவதும் பெரும் இடைஞ்சலாக இருப்பதால், தனது வீட்டினருகே காரை நிறுத்த வேண்டாம் என பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மேகன் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளார்.

ஹரியும் மேகனும் புதிதாக குடிபெயர்ந்துள்ள வீட்டின் அருகில் விண்ட்சர் அரண்மனை ஊழியர்கள் நீண்ட காலமாக தங்கள் கார்களை பார்க் செய்து வருகின்றனர்.

தற்போது கார்கள் வருவதும் போவதும் தங்களுக்கு இடைஞ்சலாக உள்ளதால் வேறு இடத்தில் கார்களை பார்க் செய்யுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது அரண்மனை ஊழியர்களை எரிச்சலூட்டியுள்ளது.

தற்போது அவர்கள் இன்னொரு கார் பார்க்கில் தங்கள் வாகனங்களை நிறுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள், அது சுமார் ஒரு மைல் தூரத்தில் உள்ளது. இதனால் அரண்மனை ஊழியர்கள் வேலைக்கு வருவதற்காக ஒரு மைல் தூரம் நடக்க வேண்டியுள்ளது.

இனி கொஞ்ச நாளைக்குப்பிறகு, தங்களுக்கு தொந்தரவாக இருக்கிறது என்பதற்காக நாங்கள் வழக்கமாக கிரிக்கெட் விளையாடும் இடத்தில் விளையாட விட மாட்டார்களோ என்று பயமாக இருக்கிறது என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இது ஹரி மேகனின் உத்தரவு அல்ல என்றும், அரண்மனையின் கண்காணிப்பாளரின் உத்தரவு என்றும் மூத்த அரண்மனை ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்