கணவரின் இறுதிச்சடங்கிற்காக துபாய் சென்ற பிரித்தானிய தாய் கைது... கண்ணீருடன் தனியாக நாடு திரும்பிய மகள்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரிந்து சென்ற கணவன் பற்றி தீங்கிழைக்கும் வகையில் ஆன்லைனில் கருத்து பதிவிட்ட பிரித்தானிய தாயை துபாய் பொலிஸார் கைது செய்து பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்துள்ளனர்.

லண்டனை சேர்ந்த லலே ஷவரவ்ஷ் (55) என்பவர், தன்னிடம் இருந்து விவாகரத்து பெற்று துபாயில் வசித்து வந்த கணவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்துகொளவதற்காக மகள் பாரீஸ் உடன் சென்றிருக்கிறார்.

அங்கு சென்றடைந்ததுமே துபாய் பொலிஸார் லலே ஷவரவ்ஷ்-ஐ கைது செய்து பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்துள்ளனர்.

2016ம் ஆண்டு பிரிந்து சென்ற கணவர் மற்றும் அவருடைய புதிய மனைவியை பற்றி தவறாக சமூகவலைத்தளத்தில் பதிவிட்டதற்காக கைது செய்திருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

வெளிநாட்டில் தங்கியிருக்கும் ஒரு நபர், துபாயில் உள்ள ஒரு நபரை பற்றி தவறாகவோ அல்லது தீங்கிழைக்கும் வகையிலோ ஆன்லைனில் கருத்து பதிவிட கூடாது. அந்த வகையில் சட்டத்தினை மீறியிருக்கும் லலே ஷவரவ்ஷிற்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் £50,000 பவுண்டுகள் அபராதமாக விதிக்கப்படலாம் என கூறியுள்ளனர்.

இதற்கிடையில் அவருடையாய் 14 வயது மகள் மட்டும் தனியாக பிரித்தானியவிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

இதுகுறித்து லலே ஷவரவ்ஷ் கூறுகையில், துபாயிலிருந்து வெளியேற எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஒருமுறை மட்டும் நீதிமன்றம் அழைத்து சென்றார்கள். என்னை பாதுகாத்துக்கொள்ள எனக்கே அனுமதி இல்லை. ஒரு காவல் நிலையத்தில் 12 மணிநேரத்திற்கு மேலாக காத்திருக்க வைத்திருந்தார்கள்.

நான் பயத்தில் இருக்கிறேன். என்னால் சாப்பிடவும், தூங்கவும் முடியவில்லை. என்னுடைய மகள் தினமும் இரவு தூங்குவதற்காக அழுகிறாள். நாங்கள் இருவரும் அதிக நெருக்கமாக இருந்தோம். குறிப்பாக என்னுடைய கணவர் பிரிந்து சென்ற பின்னர், இருவர் மட்டும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்தோம். என்னை விட்டு அவளை பிரித்து வைத்திருப்பது எனக்கு மிகுந்த வேதனையை தருகிறது என தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து கூறியுள்ள வெளியுறவு அலுவலகம், நாட்டின் வெளியிலிருந்து சமூக ஊடகத்தின் வாயிலாக தாக்குதல் கருத்து பதிவிட்டதாலே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லலே ஷவரவ்ஷ் போர்த்துகீசிய கணவர் டாஸ் சாண்டோஸ் (55) என்பவரை திருமணம் செய்துகொண்டு 18 ஆண்டுகள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் பிறந்தார்.

லலே ஷவரவ்ஷ் துபாயில் வேலை செய்து வந்த சமயத்தில் இருவரும் 8 மாதங்கள் இங்கே தங்கியிருந்தனர். லண்டன் திரும்பும்போது சாண்டோஸ் மட்டும் வர மறுத்துள்ளார். அதன்பிறகு 2016ம் ஆண்டு இருவரும் விவகாரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

சில மாதங்கள் கழித்து பேஸ்புக்கில் தன்னுடைய கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றிருப்பதை பார்த்து லலே அதிர்ச்சியடைந்துள்ளார்.

இணையத்தில் பதிவிடப்பட்டிருந்த கணவனின் திருமண புகைப்படத்திற்கு கீழ், 'இந்த கழுதைக்காக தான் என்னை விட்டு சென்றாயா? நாசமாய் போ முட்டாள்' என பதிவிட்டிருந்தார்.

மற்றொரு பதிவில், 'நீ ஒரு கழுதையை திருமணம் செய்துள்ளாய்' என பதிவிட்டிருந்தார்.

லண்டனில் தன்னுடைய மகளுடன் சேர்ந்து லலே புதிய வாழ்க்கை ஒன்றினை வாழ்ந்து வந்தார். 55 வயதில் சாண்டோஸ் இறந்ததை கேள்விப்பட்ட அவருடைய மகள் பாரீஸ், இறுதியாக தந்தையை பார்க்க வேண்டும் என லலேவை வற்புறுத்தியுள்ளார்.

அதன்பேரில் தான் இருவரும் துபாய்க்கு வந்துள்ளனர். மார்ச் 10ம் திகதி துபாய் வந்த உடனே அவர்களை நாங்கள் கைது செய்துவிட்டோம். ஏப்ரல் 11ம் திகதி அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்