சிறுவயதிலிருந்து தந்தையின் கொடுமை! பேசும் திறனை இழந்த இளம்பெண்... 13 ஆண்டுகள் கழித்து நடந்த அதிசயம்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த பெண் சிறுவயதிலிருந்து தந்தையால் அனுபவித்த கொடுமையால் பேசும் திறனை இழந்த நிலையில் 13 ஆண்டுகளுக்கு பின்னர் இசை மீது கொண்ட ஆர்வத்தால் மீண்டும் பேச தொடங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமீலியா ரோஸ் என்ற பெண் சிறுவயதிலிருந்தே தந்தை ராபர்ட் பராமரிப்பில் தான் வளர்ந்தார்.

பள்ளிக்கு அமீலியா சென்ற போது சக மாணவர்கள் அவரை கிண்டல் செய்வதும், அடிப்பதுமாக இருந்தார்கள்.

பின்னர் தந்தையிடம் ஆறுதல் வேண்டி வீட்டுக்கு வந்தால் அவரும் அமீலியாவை அடித்து கொடுமைப்படுத்தியதுடன், மனதளவிலும் துன்புறுத்தி வந்தார்.

இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் பேசும் திறனை எட்டு வயதில் இழந்தார் அமீலியா.

இசை மீது மிகுந்த ஆர்வம் கொண்ட அமீலியா அதை நோக்கியே பயணித்தார்.

பின்னர் 21 வயதில் இசைக்கல்லூரி அமீலியா சேர்ந்த நிலையில் தனது முழு கவனத்தையும் அதன் மீதே செலுத்தினார்.

எந்த இசையை தனது வாழ்க்கையாக நினைத்தாரோ அந்த இசை தான் அவருக்கு அந்த அற்புதத்தை செய்தது.

ஆம், 13 ஆண்டுகளாக பேசும் திறனை இழந்த அமீலியாவுக்கு மீண்டும் பேச்சு வந்தது.

அமீலியாவுக்கு அவரின் ஆசிரியர் ஹன்சா மிகவும் உதவியாக இருந்தார்.

இந்நிலையில் தற்போது 27 வயதாகும் அமீலியாவுக்கு மூளையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மீண்டும் பேசுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அமீலியா பேச தொடங்கியதும், பாடல்கள் பாடியவாறு வெளியிட்ட ஒரு வீடியோ மிகவும் வைரலாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களை பெற்றது.

இசை தான் என் நோய் நிவாரணி, எனக்கு தன்னம்பிக்கை மிகவும் குறைவு தான், ஆனால் எனது இசை எனக்கு அதிகம் தன்னம்பிக்கை ஊட்டுகிறது.

நான் சிறுவயதிலிருந்து பல துன்பங்களை அனுபவித்துள்ளேன், அதற்கு இருக்கும் ஒரே மருந்து இசை தான் என்பதே அமீலியாவின் கருத்தாக உள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்