மகள் உலகமெங்கும் அறியப்படும் பிரபலம்... கோடிகளுக்கு அதிபதி: பரிதாப நிலையில் தந்தை

Report Print Arbin Arbin in பிரித்தானியா

உலகமெங்கும் இசை ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரித்தானிய பாடகர் adele-ன் தந்தை, நாள் ஒன்றுக்கு 50 பவுண்டுகள் ஊதியமாக பெறும் பரிதாப நிலையில் வாழ்ந்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாடகர் adele-ன் தந்தை மார்க் எவான்ஸ் தமது மகளுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தனியாக பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மார்க் எவான்ஸ் நாள் ஒன்றுக்கு 50 முதல் 100 பவுண்டுகள் ஊதியமாக பெறும் சாரதி பணியில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

140 மில்லியன் பவுண்டுகளுக்கு அதிபதியான பாடகர் adele தமது நான்காவது இசைத்தொகுப்பை வெளியிடும் பரபரப்பில் இயங்கி வருவதாகவும், இதனால் அவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

adele 3 வயதாக இருக்கும்போது மார்க் தமது மனைவியை பிரிந்து சென்றுள்ளார்.

இந்த நிலையில் பாடகர் adele-ன் வாழ்க்கை தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் கருத்து தெரிவித்ததாக கூறி கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து தந்தையை ஒதுக்கி வைத்துள்ளார் adele.

அப்போதிலிருந்தே மார்க் எவான்ஸ் தனியாக வசித்து வருகிறார். தமது மகளிடம் வருத்தம் ஏதும் இல்லை என கூறும் அவர், அவரது பணம் மற்றும் அந்தஸ்தில் தமக்கு எந்த நாட்டமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இதனிடையே 2013 ஆம் ஆண்டு தமது மகளுடன் ஒன்று சேர மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்ததாக கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்