Brexit: பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இன்னொரு வாக்கெடுப்புக்கான விவாதம் தொடர்கிறது!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

Brexit குறித்த விவாதங்கள் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. இன்றும் பிரித்தானிய நாடாளுமன்றத்தில், பிரித்தானிய பிரதமர் தெரஸா மே பிரெக்சிட் தொடர்பாக முன்வைத்துள்ள ஒப்பந்தத்தை ஆதரிப்பதா இல்லையா என்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதித்து வருகிறார்கள்.

அவரது ஒப்பந்தத்தை ஆதரிக்கக்கூடாது என்று பேசுபவர்கள், அவரை ஜெயிக்க வைப்பது, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும் என வாக்களித்த பிரித்தானிய மக்களுக்கு செய்யும் துரோகம் என்று வாதிடுகின்றனர்.

தனது ஒப்பந்தம் தோற்கடிக்கப்படலாம் என்ற அச்சத்தில், தான் ராஜினாமா செய்வது உட்பட வாக்குறுதிகளை அள்ளி வழங்கி வருகிறார் மே.

போரிஸ் ஜான்ஸன் மேக்கு ஆதரவாக திரும்பியது ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்பட்டாலும், பிரெக்சிட் ஆதரவாளர்கள் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்திடம் சரணடைய முடியாது என்று வாதிடுகின்றனர்.

ஆனால் தெரஸா மே தோற்கடிக்கப்பட்டால், அவர் பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுப்பார் என்ற அச்சமும் நிலவுகிறது, அதுவும் அடுத்த வாரமே.

இன்று நடக்கவிருக்கும் வாக்களிப்பின் முடிவுகள்தான் அடுத்தடுத்து நடக்கவிருப்பவற்றை முடிவு செய்ய இருக்கின்றன எனலாம்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers