பிரித்தானியாவில் சொந்த மகளுக்கே வாடகை தாயாக மாறிய 55 வயது தாய்! ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் சொந்த மகளுக்கே வாடகை தாயாக மாறிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Wales மாகாணத்தின் Lampeter பகுதியைச் சேர்ந்த தம்பதி Adam(40) Tracey Smith(31).

Tracey Smith பிறக்கும் போதே கருப்பை இல்லாமல் பிறந்ததால், அவரால் குழந்தை பெற்றெடுக்க முடியாது.

இதனால் மிகுந்த வேதனையில் இருந்த அவருக்கு, அவரின் தாய் வாடகை தாயாக மாறி குழந்தை பெற்றெடுத்து கொடுத்துள்ளார்.

இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், Tracey Smith-ஆல் குழந்தை பெற முடியாது என்ற செய்தி அறிந்தவுடன் மிகுந்த வேதனையில் இருந்தார். இதனால் அவரின் தாய் Miles(55) மகளிடம் குழந்தை பெறுவதற்கு தன்னால் என்ன உதவி செய்ய முடியுமோ அதை நான் செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதனால் Smith-ன் கணவர் Adam இதற்கு என்ன வழி என்று யோசித்த போது fertility treatment(கருவுறுத்தல் சிகிச்சை) மேற்கொள்ளலாமா என்ற யோசனையில் இறங்கியுள்ளார்.

அதன் பின் இந்த முடிவுக்கு Miles ஒத்துகொள்ளவே, அவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க உதவும் ஏஜென்சியை நாடியுள்ளனர்.

பிரித்தானியாவில் கணவன் மற்றும் மனைவி இரண்டு பேரின் சம்மதத்துடன் மட்டுமே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுப்பது சட்டப்படி செல்லும்.

அதையும் மீறி ஒருவருக்கு பிடிக்கவில்லை என்றால் இது சட்ட விரோதம் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து மகளுக்காக குழந்தை பெற்றெடுக்க முடிவு செய்த Miles அதற்காக தன்னுடைய உடல் எடையை குறைக்க முடிவு செய்தார்.

ஏனெனில் 55 வயதில் குழந்தை பெற்றெடுப்பது என்பது மிகவும் ஆபத்தானது. இதனால் சரியான எடை வேண்டும் என்பதால் அதற்காக 6 ஸ்டோன் அதாவது 38 கிலோ எடை குறைத்ததாக கூறப்படுகிறது.

அதன் பின் Smith-ன் கருமுட்டை மற்றும் Adam -ன் விந்தணுவை எடுத்து, அதை சரியான முறையில் ஆய்வில் வைத்து பதப்படுத்தி அதன் பின் அதை Miles-ன் கருப்பையில் செலுத்தியுள்ளனர்.

இதையடுத்து Miles-க்கு கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் திகதி அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் பிரித்தானியாவில் இருக்கும் சட்டப்படி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொடுத்தாலும் குழந்தை பெறும் நபரே சொந்த தாய் ஆவார், அவர் பெற்ற குழந்தையை தத்துதான் கொடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்