அருகில் படுத்திருந்த கணவன்... கனவில் மூச்சு விட திணறுவதாக நினைத்த மனைவி... கண்விழித்த போது காத்திருந்த அதிர்ச்சி

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் தூங்கி கொண்டிருந்த பெண், கனவில் மூச்சு திணறுவதாக உணர்ந்த நினைத்த நிலையில் மர்ம நபர் அவர் கழுத்தை நெரித்ததால் அவர் அந்த சிரமத்துக்கு ஆளானது தெரியவந்துள்ளது.

Devon கவுண்டியை சேர்ந்தவர் ஜெனிபர் ருஸ்டல். இவர் சில தினங்களுக்கு முன்னர் தனது கணவர் பிரான்ஸிகோ நிகோலி அருகில் படுக்கையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது கனவில் மூச்சு விட சிரமப்படுவது போல ஜெனிபர் உணர்ந்த நிலையில் திடீரென கண்விழித்தார். அப்போது தன் கழுத்தை மர்மநபர் ஒரு நெரித்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார் ஜெனிபர்.

ஜெனிபர் அந்த நபரை தள்ளிவிட முயன்ற நிலையில் அருகில் படுத்திருந்த பிரான்ஸிகோ கண்விழித்தார்.

இதையடுத்து மர்மநபர் கையை பிடித்து தள்ளிவிட்டார் பிரான்ஸிகோ.

பின்னர் கீழே விழுந்த மர்ம நபர் அங்கிருந்து பதறியடித்து கொண்டு மாடிப்படியில் இறங்கி தட்டுதடுமாறி தப்பித்து ஓடினார்.

இதை தொடர்ந்து உடனடியாக ஜெனிபரும், பிரான்ஸிகோவும் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்களுடன் வந்த பொலிசார் அங்கு சோதனை நடத்தினார்கள்.

இந்நிலையில் ஜெனிபரை கொலை செய்ய வந்தவன் குறித்த அடையாளங்களை அவர் பொலிசில் தெரிவித்துள்ள நிலையில் அவனின் வரைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

ஜெனிபர் கூறுகையில், அவன் கழுத்தை நெரிக்கும் போது நிச்சயம் உயிரிழந்துவிடுவேன் என்றே நினைத்தேன், பிரான்ஸிகோ மட்டும் என்னை காப்பாற்றவில்லை என்றால் நான் இருந்திருக்க மாட்டேன்.

அந்த நபருக்கு 35லிருந்து 45 வயதுக்குள் இருக்கலாம், அவன் கையில் கையுறை எதுவும் அணியவில்லை என கூறியுள்ளார்.

மர்ம நபரின் புகைப்படத்தை பார்த்து யாருக்கேனும் அடையாளம் தெரிந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்