லண்டனில் அப்பாவி ஆண்கள் 15 பேர் மீது பொய்குற்றம் சுமத்தி சிறைக்கு அனுப்பிய பெண்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

லண்டனின் அப்பாவி ஆண்கள் 15 பேர் மீது பாலியல் குற்றம் சுமத்தியதற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணின் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

லண்டனை சேர்ந்த ஜெம்மா பீலே (27) என்பவர், தான் ஒரு ஓரினசேர்க்கையாளர் என்றும், மகத் காசிம் என்பவர் தன்னை வற்புறுத்தி பாலியல் உறவு வைத்துக்கொண்டதாகவும் 2010 ம் ஆண்டு பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார், மகத் காசிமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

2012ம் ஆண்டு நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் போது புதிதாக வந்த நீதிபதி, மகத் காசிமிற்கு 7 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், அவருடைய காயங்களுக்காக 11,000 டொலர் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டிருந்தார்.

பின்னர் ஜூலை 2012 இல் இரு பாலியல் தாக்குதல்களுக்கு ஆளாகியிருந்ததாக பீலே ஜெம்மா மீண்டும் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 9 ஆண்களால் கூட்டு துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும், 2013ம் ஆண்டில் 6 ஆண்கள் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் அடுத்தடுத்து பகீர் கிளப்பினார்.

இதனால் பொலிஸாருக்கு சந்தேகம் வலுத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஜெம்மா, பல கட்டுகதைகளை கட்டியிருப்பது தெரியவந்தது. இந்த விசாரணைக்காக மட்டும் இங்கிலாந்து அரசாங்கம் 11,000 பவுண்டுகளை செலவு செய்திருந்தது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட ஜெம்மாவிற்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஜெம்மா மேல்முறையீடு செய்த மனு, இங்கிலாந்தின் மூத்த பெண் நீதிபதியின் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜெம்மா சார்பில் வாதாடிய வழக்கறிஞர், கட்டுக்கதைகளை கூறிய நேரத்தில் ஜெம்மா ஒரு குழந்தையாக இருந்தார். அதனால் 10 ஆண்டு சிறைத்தண்டனையை குறைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி ஜெம்மாவின் மேலுமுறையீடு மனுவை நிராகரித்து உத்தரவிட்டார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்