லண்டனில் கோடியில் சம்பளம்! தோல்வியை வெற்றியாக்கிய இந்திய இளைஞர்

Report Print Raju Raju in பிரித்தானியா

இந்தியாவை சேர்ந்த இளைஞருக்கு லண்டனில் உள்ள கூகுள் நிறுவனத்தில் ரூ. 1.2 கோடி சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.

மும்பையை சேர்ந்தவர் அப்துலா கான். இவர் ஐஐடியில் நுழைவு தேர்வு எழுதிய நிலையில் அதில் தோல்வி கண்டார்.

பின்னர் ஸ்ரீ எல்ஆர் திவாரி பொறியியல் கல்லூரியில் தனது பி.இ கணினி பொறியியல் படிப்பை தொடர்ந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் புரோகிராமிங் சேலஞ் ஒன்றின் மூலம் அப்துலா கானின் சுயவிபரங்களை கூகுள் நிறுவனம் பார்வையிட்ட நிலையில் அவரை நேர்காணலில் பங்கேற்க அழைப்பு விடுத்தது.

கூகுள் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட ஓன்லைன் தேர்வுகளை எதிர்கொண்ட அப்துலா கான் அனைத்திலும் வெற்றி பெற்று இறுதி தேர்வுக்காக லண்டன் சென்றார்.

இறுதிதேர்விலும் அப்துலா கானுக்கு வெற்றி கிடைத்த நிலையில் அவரை வருகிற செப்டம்பர் மாதம் லண்டன் அலுவலகத்தில் சேருமாறு பணிநியமன ஆணையை கூகுள் நிறுவனம் வழங்கியுள்ளது.

அவருக்கு ஆண்டு சம்பள தொகையாக ஒரு கோடியே 20 லட்சத்தை அறிவித்துள்ளது கூகுள் நிறுவனம்.

பொதுவாக ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் பயில்பவர்களுக்கு தான் கூகுள் போன்ற மிகபெரிய நிறுவனங்களில் இந்தளவு அதிகமான சம்பளத்தில் வேலை கிடைக்கும்.

ஆனால் அப்துலா கானின் திறமையால் அவருக்கு இங்கு வேலை கிடைத்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்