99 வயது அவுஸ்திரேலிய பாட்டிக்கு பிரித்தானிய இளவரசர் ஹரி அளித்த சர்ப்ரைஸ்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது ஒரு போர் வீரரின் மனைவியாகிய 98 வயது பாட்டி ஒருவரை இளவரசர் ஹரி வாழ்த்தியதும், அவர் ஹரியை கட்டியணைத்து முத்தமிட்டதும் தலைப்பு செய்தியாகின.

இந்நிலையில், இன்று தனது 99ஆவது பிறந்த நாளை Daphne Dunne என்னும் அந்த பாட்டி கொண்டாடும் நிலையில், மறக்காமல் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து அட்டை ஒன்றை அனுப்பி, தனது மற்றும் தன் மனையிவின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார் இளவரசர் ஹரி.

தான் அனுப்பியுள்ள வாழ்த்து அட்டையில், அன்புள்ள Daphne, இன்று 99ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் உங்களுக்கு நானும் எனது மனைவியும் மனதார வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய நீங்கள், உங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியான ஒரு பிறந்த நாளைக் கொண்டாடுவீர்கள் என்று நம்புகிறோம்.

வாழ்வின் இந்த முக்கியமான கட்டத்தை, அதாவது ஒரு நூற்றாண்டை தொடுவதற்கு முந்தைய ஆண்டை நீங்கள் அடைந்ததற்கு வாழ்த்துக்கள்.

'Happy Birthday Daphne’ என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மோசமான ஒரு நோயால் பாதிக்கப்பட்டுள்ள Daphneக்கு எப்போதும் உதவியாக இருக்கும் பிரித்தானிய இளவரச தம்பதி அனுப்பியுள்ள இந்த வாழ்த்து, அவருக்கு மிகவும் மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவரது மகள் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்