6 மாதத்தில் தன்னுடைய வருமானத்தை 100 பவுண்டிலிருந்து 100,000 பவுண்டுகளாக மாற்றிய இளம்பெண்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

இங்கிலாந்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் தனியாக ஒரு இணையதளம் துவங்கி 6 மாதங்களில் 100,000 பவுண்டுகள் சம்பாதித்து அசத்தியுள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்த பிரையோனி கோர்டன் (23) என்கிற இளம்பெண் தன்னுடைய 21 வயதில் பண்டோரா பகுதியில் உள்ள கடை ஒன்றில் பணிப்பெண்ணாக பணிபுரிந்துள்ளார்.

அந்த சமயம் சொந்தமாக ஒரு ஜவுளிக்கடை வைக்க முடிவெடுத்த பிரையோனி, 100 பவுண்டுகள் முதலீடு செய்து சில துணிகள் வாங்கி பிகினி ஆடைகளாக மாற்றியுள்ளார்.

அவற்றை "தலாய்யா ரோஸ்" என்கிற பெயரில் ஆன்லைனில் விற்பனை செய்ய ஆரம்பித்தார். இதனை வைத்து தற்போது 6 மாதத்திற்குள் 100,000 பவுண்டுகளுக்கும் அதிகமாக சம்பாதித்துள்ளார்.

இந்த இளம்தொழிலதிபர் தனக்கு சொந்தமாக ஒரு ரேஞ்ச் ரோவர் கார் வாங்கியதோடு, தன்னுடைய அம்மவிற்கும் ஒரு கார் வாங்கி கொடுத்துள்ளார்.

மேலும், இந்த ஆண்டின் இறுதியில் தன்னுடைய சொந்த கனவு வீடு ஒன்றினையும் கட்ட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள பிரையோனி, நான் பகுதி நேர வேலை செய்துகொண்டிருந்த பொழுது ஒருநாள் எனக்கு இந்த யோசனை தோன்றியது. யாரோ ஒரு நபரின் கீழ் வேலை செய்வதற்கு பதில், நானே ஒரு முதலாளியாக மாற முடிவு செய்தேன்.

அதன்படி என்னிடம் இருந்த பணத்தில் துணிகளை வாங்கி, எனக்கு பிடித்தமான மொடல்களில் நீச்சல் உடைகளை தைத்து விற்பனை செய்ய ஆரம்பித்தேன். இதற்கு என்னுடைய குடும்ப தோழி ஒருவர் உதவி செய்தார்.

அவற்றை ஆன்லைனில் விற்பனை செய்வதற்கு முன், நானே அணிந்து செல்ல ஆரம்பித்தேன். eBay போன்ற இணையத்தளத்தை ஆரம்பித்து இளைஞர்களை கவர முயற்சி செய்தேன். நானே ஒரு மொடல் அழகியாக மாறி என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட ஆரம்பித்தேன். இதனால் 4000 பேர் என்னை பின்தொடரவும் ஆரம்பித்தனர்.

என்னுடைய விற்பனை ஆரம்பித்த 6 மாதத்தில் புதிதாக ஆரம்பித்தேன். என்னுடைய வருமானமும் 500,000 பவுண்டுகளாக மாறியது. தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 150,000 பேர் பின்தொடர்கின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்