29 வயது இளைஞரை காரில் விரட்டி பிடித்த பிரித்தானியாவின் வயதான பொலிஸார்: குவியும் பாராட்டு

Report Print Vijay Amburore in பிரித்தானியா

மதுகுடித்துவிட்டு வேகமாக காரில் சென்ற இளைஞரை விரட்டி பிடித்த பிரித்தானியாவின் வயதான பொலிஸாருக்கு பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

பால் டைட் என்கிற 29 வயது இளைஞர் இங்கிலாந்தின் Benfleet பகுதியில் மது குடித்துவிட்டு அதிவேகத்தில் கார் ஒட்டி செல்வதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

அந்த சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பிரித்தானியாவின் வயதான பொலிஸ் எனப்படும் கீத் ஸ்மித் (74) காரை நிறுத்துமாறு அறிவுறுத்தினார்.

ஆனால் பவுல் நிறுத்தாமல் வேகத்தை அதிகப்படுத்தியுள்ளார். இதனையடுத்து தனது காரில் ஏறிய ஸ்மித், சிறிதும் விட்டுக்கொடுக்காமல் இளைஞரை விரட்ட ஆரம்பித்துள்ளார்.

சிறிது தூரம் சென்றதும் வெளியில் குதித்து அங்கிருந்த தோட்ட பகுதியில் தப்பி சென்றுவிட இளைஞர் முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் ஸ்மித் அந்த இளைஞரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளார். அங்கு இளைஞரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எஸ்ஸெக்ஸ் காவல்துறை தலைமை கான்ஸ்டபிள் பி.ஜே. ஹாரிங்டன், 'ஸ்மித் அனைவருக்கும் ஒரு முன் உதாரணம்' என புகழாரம் சூட்டியுள்ளார்.

முன்னதாக ஸ்மித் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், சக்கரத்தில் சிக்கிக்கொண்ட ஒரு வயதான நபரை காப்பாற்றி இதேபோல தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers