குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து கொண்டிருந்த போது திடீரென உயிரிழந்த பெண்... அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in பிரித்தானியா

அயர்லாந்தில் தாய்ப்பால் கொடுக்கும் போது திடீரென குழந்தை மீது தாய் விழுந்த நிலையில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேரி டவுனி என்ற பெண்ணுக்கு சமீபத்தில் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தைக்கு டாரக் என பெயர் வைக்கப்பட்டது. டாரக் பிறந்த நான்காவது நாள் மருத்துவமனையில் இருந்தபடியே அவனுக்கு மேரி தாய்ப்பால் கொடுத்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென வலிப்பு நோய் மேரிக்கு ஏற்பட்ட நிலையில் குழந்தையை கீழே போட்ட மேரி அவன் மீதே விழுந்துள்ளார்.

இதில் மேரி உயிரிழந்தார், அங்கு வந்த மருத்துவர்கள் குழந்தைக்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனில்லாமல் குழந்தையும் உயிரிழந்தது.

மேரி மற்றும் டாரக்கின் எதிர்பாராத மரணம் அவர் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முக்கியமாக மேரியின் கணவர் கிரோன் மற்றும் அவரின் இரண்டு மகன்கள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர்.

மேரி மிகவும் தங்கமான பெண் எனவும், மற்றவர்களுக்கு அதிகம் உதவும் மனப்பான்மை கொண்டவர் எனவும் குடும்பத்தார் புகழாரம் சூட்டியுள்ளனர்.

இந்நிலையில், மேரியின் கையில் குழந்தை டாரக்கை வைத்திருக்கும் நிலையிலேயே இருவரையும் ஒன்றாக புதைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

விரைவில் இருவரின் இறுதிச்சடங்கு நடக்கவுள்ள நிலையில் இன்று குழந்தை டாரக்கின் சடலத்துக்கு பிரேத பரிசோதனை செய்யப்படவுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers