உலகின் முதல் நிர்வாண விமான பயணம் லண்டனில் ஆரம்பம்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

லண்டனில் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவதற்காக உலகின் முதல் நிர்வாண விமான பயணம் தொடங்கவுள்ளது.

londoninthesky என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த நிர்வாண விமான பயணம் ஏப்ரல் 30 ஆம் திகதி தொடங்கவுள்ளது.

அதாவது, Movember, Coppafeel ஆகிய இரண்டு தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டும் பொருட்டு இந்த பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதில், Coppafeel தொண்டு நிறுவனம் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகிறது மற்றும் Coppafeel தொண்டு நிறுவனம் மனநல பிரச்சனைகள் தொடங்கி இன்று ஆண்கள் எதிர்கொள்ளும் உடல்நலப்பிரச்சனைகளில் கவனம் செலுத்தும் பணியை செய்து வருகிறது.

இநத பயணத்தின்போது பயணிகளுக்கு போதுமான வசதிகள் செய்துகொடுக்கப்படும். ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்னியாக அழைத்து செல்லப்படுவார்கள், ஒரு பயணத்திற்கு 22 பேர் மட்டுமே அழைத்துசெல்லப்படுவார்கள்.

ஒரு நபருக்கான விமான பயண செலவு 99 பவுண்ட் ஆகும். ஏப்ரல் 30 ஆம் திகதி லண்டன் நேரப்படி காலை 8.30 மணியளவில் இந்த பயணம் தொடங்குகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்