3 வாரங்கள் தொடர்ந்து நித்திரையில் இருந்த இளம்பெண்: வெளியான காரணம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவின் லீசெஸ்டர் பகுதியில் குடியிருக்கும் பல்கலைக்கழக மாணவி ஒருவர் விசித்திர நோயால் தவித்து வருகிறார்.

இவரது இந்த விசித்திர நோயால் அன்றாட வகுப்புகளும், பல்கலைக்கழக தேர்வுகள் பலவும் இழக்க நேரிட்டுள்ளது.

21 வயதான ரோடா ரோட்ரிக்ஸ்-டியாஸ் தமக்கு ஏற்பட்டுள்ள விசித்திர நோய் காரணமாக தொடர்ந்து பல நாட்கள், பல வாரங்கள் நித்திரையில் இருந்து வருகிறார்.

தமக்கு 4 வயதானபோது முதன் முறையாக இந்த அவஸ்தை ஏற்பட்டதாக கூறும் ரோட்ரிக்ஸ், அப்போது தொடர்ந்து 3 வாரங்கள் நித்திரையில் இருந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டார்கள் என்றபோதும் அவர்களால் உரிய காரணத்தை கண்டுபிடிக்க இதுவரை முடியவில்லை என அவர கூறியுள்ளார்.

அதன்பின்னர் தமது 16 ஆம் வயதில் மீண்டும் ஏற்பட்டது என கூறும் அவர், இந்த விசித்திர நிலை காரணம் தம்மால் எந்த கலை நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

அதிக நித்திரை காரணமாக தம்மை பாடசாலையில் இருந்து வெளியேற்றிய சம்பவமும் ஏற்பட்டுள்ளது என கூறும் ரோட்ரிக்ஸ்,

இந்த நித்திரை நிலையில் இருந்து வெளியேற தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும், ஆனால் முயற்சிகள் எதுவும் கைகூடவில்லை எனவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

கடைசியாக தொடர்ந்து 60 மணி நேரம் நித்திரையில் இருந்துள்ளதாக கூறும் ரோட்ரிக்ஸ், தமது வாழ்க்கையில் இதுவரை வீணான காலகட்டத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் தாம் களமிறங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்