Brexit: நேற்றைய திருப்பங்களும் இன்றைய நிகழ்வுகளும்...

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரெக்சிட் தொடர்ந்து புதிய திருப்பங்களை சந்தித்து வருகிறது.

அதிரடி திருப்பமாக, பிரெக்சிட் ஆதரவாளரான Jacob Rees-Mogg பிரித்தானிய பிரதமரான தெரஸா மேக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

இன்று இரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்க இருக்கும் மே, பதவி விலகுவது குறித்து அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி அவர் பதவி விலகுவதாக அறிவிக்கும் பட்சத்தில், இவ்வளவு நாள் அவரை எதிர்த்து வந்த 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை, அவருக்கு ஆதரவாக திரும்புவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிரெக்சிட் ஒப்பந்தம் இந்த வார இறுதிக்குள் நிறைவேற்றப்படாவிட்டால், பிரெக்சிட்டை எதிர்ப்போர் அதை நிறுத்திவிடுவார்கள் என்கிறார் அவர்.

அதேபோல் போரிஸ் ஜான்சனும் கூட தெரஸா மேக்கு ஆதரவளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிரெக்சிட் ஆதரவாளரான Andrea Leadsom கூறும்போது, நம்மை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியே கொண்டு வருவதற்கு பிரதமருக்கு எனது முழு ஆதரவையும் தெரிவிக்கிறேன்.

அதற்கு பின் அவர் பிரதமராக இருப்பாரா பதவி விலகுவாரா என்பதெல்லாம் அவருடைய முடிவு என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க இருக்கும் வாக்கெடுப்பு ஒன்றில், நார்வே முறை, சுங்க அமைப்பு, பிரதமர் தெரஸா மேயின் ஒப்பந்தம் அல்லது ஒப்பந்தங்களற்ற பிரெக்சிட் என ஐந்து வகை பிரெக்சிட் விருப்பத்தேர்வுகளில் தாங்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை தேர்ந்தெடுப்பார்கள்.

அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதில் எது அதிகம் விரும்பப்பட்டதோ அது மீண்டும் இரண்டாவது சுற்று வாக்கெடுப்புக்கு விடப்படும்.

இது மக்கள் பங்கெடுக்கும் வாக்கெடுப்பு அல்ல, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கெடுக்கும் வாக்கெடுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers