லண்டனில் திப்பு சுல்தான் பயன்படுத்திய ஆயுதங்கள் அதிக விலைக்கு விற்பனை!

Report Print Kabilan in பிரித்தானியா

பிரித்தானியாவில் மைசூரின் கடைசி திப்பு சுல்தானின் ஆயுதங்கள் அதிக விலைக்கு ஏலத்தில் விற்கப்பட்டன.

திப்பு சுல்தான் பிரிட்டிஷ் படைகளுடனான இரண்டாம் ஆங்கில-மைசூர் போரில் தனது தந்தை ஹைதர் அலி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்தார். ஹைதர் அலியின் மறைவுக்கு பின்னர் மைசூரின் மன்னரானார் திப்பு சுல்தான்.

1782ஆம் ஆண்டில் இருந்து 1799ஆம் ஆண்டு வரை மைசூரை ஆண்ட திப்பு சுல்தான், மைசூரின் புலி என்று அழைக்கப்பட்டார். இந்நிலையில், திப்பு சுல்தானின் ஆட்சிக்காலத்தின்போது அவர் போர்களில் பயன்படுத்திய வாள், துப்பாக்கி போன்றவற்றை ஏலத்திற்கு வந்தது.

இந்தப் பொருட்களை நிறுவனம் ஒன்று லண்டனில் ஏலம் விட்டது. அவை மொத்தம் ஒரு லட்சத்து 7 ஆயிரம் பவுண்டுகளுக்கு ஏலம் போனது. மேலும், வெள்ளி பூண் கொண்ட துப்பாக்கி மற்றும் குறுவாள் ஆகியவை 60 ஆயிரம் பவுண்டுகளுக்கு ஏலம் விடப்பட்டது.

இந்த ஆயுதங்களில் இருந்த துப்பாக்கிகள், மற்ற துப்பாக்கிகளை போல் இல்லாமல் மிகவும் அதிக சேதம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்கத்தினால் முலாம் பூசப்பட்ட வாள் காண்போரை கவரக்கூடியதாக இருந்தது.

இந்த வாள் 18,500 பவுண்டுக்கு (இந்திய மதிப்பில் 16 லட்சத்து 82 ஆயிரத்து 519 ரூபாய்) ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்