ஆன்லைனில் விற்பனைக்கு வந்த பிரித்தானிய இளவரசியின் அரை நிர்வாண படங்கள்?: அடுத்து நடந்தது!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கலின் அரை நிர்வாணப் படங்கள் ஆன்லைனில் விற்பனைக்கு வந்ததையடுத்து பிரபல பிரித்தானியப் பத்திரிகை ஒன்று தலையிட்டு அந்த படங்களை அகற்றியுள்ளது.

ஒரு பெண் மேலாடையின்றி சூரியக் குளியல் எடுக்கும் அந்த படங்கள், படம் ஒன்று 17.99 பவுண்டுகளுக்கு இ பேயில் விற்பனைக்கு வந்திருந்தன.

அந்த படங்கள், மேகன், இளவரசர் ஹரியை காதலிக்க தொடங்கும் நேரத்தில் முதன்முறையாக வெளிவந்தது தெரியவந்தது.

ஆனால் அந்த படங்களில் இருப்பது மேகனே அல்ல என தொடர்ந்து மறுப்பும் வெளியானது. எனவே போலியானவை என கருதப்படும் மேகனின் அரை நிர்வாணப்படங்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன என வைத்துக் கொள்ளலாம்!

அந்த படங்களை விற்பனைக்கு விட்டுள்ள நபர், அவை பிரித்தானியாவின் Hampshireஇல் எடுக்கப்பட்டவை என்று வேறு குறிப்பிட்டதோடு, பேபால் மூலம் கட்டணம் செலுத்தவும் கோரியிருந்தார்.

பிரித்தானியாவின் பிரபல பத்திரிகை ஒன்று அழுத்தம் கொடுத்ததையடுத்து இபே, அந்த படங்களை அகற்றியது.

இது குறித்து கேட்டபோது கென்சிங்டன் அரண்மனை வட்டாரம் கருத்து கூற மறுத்து விட்டது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்