23 வயது இளையவருடன் திருமணம்... 200,000 பவுண்டுகளை ஏமாந்த பிரித்தானிய பெண்மணி: அம்பலமான சம்பவம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானிய பெண்மணி ஒருவர் தமது இளைஞர் கணவருக்காக தனது வாழ்நாள் சேமிப்பு மொத்தமும் செலவிட்ட நிலையில் தற்போது சட்ட உதவியை நாடியுள்ளார்.

மேற்கு சசெக்ஸ், கிராலி பகுதியில் குடியிருக்கும், தற்போது 71 வயதாகும் மார்கரெட் என்பவரே சட்ட உதவியை நாடியுள்ளவர்.

கடந்த 2002 ஆம் ஆண்டு காம்பியாவுக்கு தமது முன்னாள் கணவருடன் சுற்றுலா சென்றுள்ளார் மார்கரெட்.

அங்கே, தம்மைவிட 23 வயது இளையவரான சம்பா சார்ர் என்பவருடன் அறிமுகமாகியுள்ளார்.

இருவருக்கும் இடையேயான நட்பானது 2004 ஆம் ஆண்டு மார்கரெட் தமது பிரித்தானிய கணவரை விவாகரத்து செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளியது.

அதன் பின்னர் சம்பா உடனான நட்பு பாலியல் நெருக்கமாக மாறியது. இருவரும் தங்கள் பாலியல் வாழ்க்கையை கொண்டாடி வந்த நிலையில் சம்பா தமது காதலை மார்கரெட்டிடம் தெரிவித்துள்ளார்.

அந்த ஆண்டே இருவரும் சுமார் 2,000 பவுண்டுகள் செலவில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அந்த பணத்தையும் மார்கரெட்டே செலவு செய்துள்ளார்.

இந்த நிலையில் 2006 ஆம் ஆண்டு கார்கரெட் கட்டணம் செலுத்திய சுற்றுலா விசாவில் சம்பா பிரித்தானியாவுக்கு வந்து சேர்ந்தார்.

அப்போது முதல் மார்கரெட்டின் வாழ்க்கை மாறத்துவங்கியதாக கூறும் அவர், சம்பா தம்முடன் இருப்பதை பெருமையாக கருதினாலும்,

வயது வித்தியாசம் காரணமாக வெளியே ஒன்றாக செல்வதை தவிர்த்து வந்துள்ளார்.

நர்ஸாக பணியாற்றி வந்த மார்கரெட் பணத்தேவைகளுக்காக கடுமையாக உழைக்க நேர்ந்தது. ஆனால் சம்பா வெறுமனே குடியிருப்பில் இருந்து வந்துள்ளார்.

இதனிடையே சம்பாவின் பேச்சை நம்பி சுமார் 90,000 பவுண்டுகள் தொகையில் காம்பியாவில் இரண்டு மாடி குடியிருப்பு ஒன்றை கட்டியுள்ளார் மார்கரெட்.

மட்டுமின்றி, சம்பா மீது எழுந்த சந்தேகம் ஒன்றை விசாரித்த மார்கரெட்டிடம் அவர் மறுப்பும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சம்பாவுக்கு சம வயது பெண்ணுடன் உறவு இருப்பதும், அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதும் மார்கரெட்டுக்கு தெரியவந்தது.

இந்த சம்பவங்களை அனைத்தையும் சம்பா மறுத்து வந்தாலும், 2012 ஆம் ஆண்டு மார்கரெட்டின் உதவியால் சம்பா பிரித்தானிய குடிமகனாக மாறினார்.

இதன் பின்னர் சம்பாவின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்தது. தொடர்ந்து மார்கரெட் அவருடனான உறவை துண்டித்துள்ளார்.

தற்போது சம்பாவின் பெயரில் காம்பியாவில் வாங்கிய சொத்துக்காக சட்ட உதவியை நாடியுள்ளார் மார்கரெட்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்