பிரித்தானியாவில் கஞ்சாவுக்கு அடிமையாகும் இளைய தலைமுறை: ஒரு அதிர்ச்சி செய்தி

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் 9 வயது சிறுவர்கள் முதல் கஞ்சாவுக்கு அடிமையானதால் மன நல சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

போதைக்கு அடிமையான 19 வயதுக்கு குறைந்த 3,400 பேர் கடந்த ஆண்டில் மட்டும் மன நல மற்றும் நடத்தை குறைபாடுகளுக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சமூக ஊடகங்கள் மூலம் போதைப்பொருட்களை எளிதாக பெற வாய்ப்புள்ளதால், இளைய சமுதாயம் முழுமையுமே தீவிர பிரச்சினைகளுக்குள்ளாகியுள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மன நலப்பிரச்சினைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் 19 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 2013, 14இலிருந்து 38 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும், கடந்த ஆண்டில் மட்டும் அது 10 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்டுள்ளோரில் பெரும்பாலோர் பையன்கள் என்றாலும், பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது.

ஆனால் இந்த எண்ணிக்கை முழுமையான எண்ணிக்கை அல்ல, காரணம், மோசமான நிலையை அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மட்டுமே இது என்பதால், இன்னும் பலரது நிலைமை வெளியே தெரியாமலேயே இருப்பதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்