நீரவ் மோடியை கைது செய்ய லண்டன் நீதிமன்றம் உத்தரவு

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வைரவியாபாரி நீரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும் லண்டனில் தலைமறைவாகியிருந்தனர்.

அவர் லண்டன் சாலையில் ஜாலியாக நடந்து செல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

மேலும், லண்டனில் சொகுசு பங்களாவில் வசித்து வரும் நீரவ்மோடி, அங்கும் வைரவியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்யவேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் இங்கிலாந்து உள்துறைச் செயலாளர் சஜித் ஜாவித்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நீரவ்மோடியை கைது செய்து ஆஜர்படுத்துமாறு வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்