15 நிமிடம் கழிவறைக்குள் இருந்தது தப்பா? பிரித்தானியாவிற்கு சென்ற பயணிகள் விமானத்தில் நடந்தை விளக்கிய இளைஞன்

Report Print Santhan in பிரித்தானியா

ஈசி ஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் விமான ஊழியர் மிகவும் மோசமாக நடந்து கொண்டதாகவும், இதனால் தான் வேதனையில் இருப்பதாகவும் பயணி ஒருவர் கூறியுள்ளார்.

Adil Kayani என்ற 35 வயது நபர் Marrakesh-விலிருந்து பிரித்தானியாவின் மான்செஸ்டர் விமானநிலையத்திற்கு Easyjet விமான நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானத்தில் சென்றுள்ளார்.

சுமார் இரண்டு மணி நேர பயண இடைவெளியில் விமானத்தின் கழிவறைக்கு சென்ற இவர், 15 நிமிடங்களுக்கு மேலாக உள்ளே இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் விமானத்தின் ஊழியர்கள் கழிவறையை தட்டியுள்ளனர். பல முறை தட்டியுள்ளனர். இவர் பேசிய போதும், விமான ஊழியர்கள் முதலில் நீ கதவை திற என்று கூறியுள்ளனர்.

வெளியே வந்த அவரின் உடை மற்றும் கலரை வைத்து இனவெறியை தூண்டும் வகையில் பேசியதாக கூறியுள்ளார்.

இதையடுத்து அவரிடம் விமான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. பயணிகளின் பாதுகாப்பிற்காகவே மட்டும் ஊழியரகள் கதவை தட்டியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.

ஆனால் இதில் எனக்கு திருப்தி இல்லை என்று Adil Kayani கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்