அடுத்த 25 ஆண்டுகளில் பிரித்தானியாவில் தண்ணீர் பற்றாக்குறை எப்படியிருக்கும்? அதிர்ச்சியளிக்கும் தகவல்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் அடுத்த 25 ஆண்டுகளில் தண்ணீர் பற்றாக்குறை மிக அதிகமாகி விடும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான ஆய்வை சுற்றுச்சூழல் நிறுவனம் மேற்கொண்ட நிலையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுற்றுச்சூழல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சர் ஜேம்ஸ் பெவன் கூறுகையில், 2040ஆம் ஆண்டு வாக்கில் வெப்பமானது மிகவும் அதிகமானதாக இருப்பதோடு பல நதிகள் 50 - 80 சதவீதம் வரை தண்ணீர் இல்லாமல் வறண்டு போகும்.

காலநிலை மாற்றத்தின் விளைவாக தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வரும் இந்த நேரத்தில் இது தொடர்பான மாற்று வழியை கண்டுப்பிடிக்காமல் போனால் நாட்டுக்கு தேவையான நீரை வழங்க முடியாது.

பிரித்தானியாவில் முக்கியமான நீர் ஆதாரங்கள் என்பது நீர்த்தேக்கங்கள் என்கிற சூழலில் கடந்த 10 வருடங்களில் புதிய நீர்த்தேக்கங்கள் கட்டப்படவில்லை.

இது குறித்து உடனடியாக அரசு கவனிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்