கடலுக்கு நடுவில் உள்ள தீவு விற்பனைக்கு! என்ன விலை தெரியுமா? ஆச்சரியப்படுத்தும் வீடியோ

Report Print Raju Raju in பிரித்தானியா

அயர்லாந்தில் உள்ள ஒரு தீவு விற்பனைக்கு என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் விலை 1.4 மில்லியன் டொலர்கள் என தெரியவந்துள்ளது.

நாட்டின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள ஆர்டோலியன் தீவு 80 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த தீவானது கடலுக்கு நடுவில் அமைந்துள்ளது.

இந்த தீவில் கி.மு 1000 வரை மனிதர்கள் குடியிருந்துள்ளார்கள். அதன்பின்னர் ஏழாம் நூற்றாண்டில் ஐம்பது முதல் எழுபது துறவிகளின் இங்கு வசித்து வந்தார்கள்.

ஆர்டோலியன் தீவில் ஒரு மிகப்பெரிய பாறாங்கல் அதன் ஓரங்களில் செதுக்கப்பட்டிருக்கின்றது. அதைச் சாபக்கல்லாக துறவிகள் பயன்படுத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த தீவானது கடந்த 1969-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டுவரை அயர்லாந்து கவிஞர் ரிச்சர்ட் மர்ஃபிக்குச் சொந்தமாக இருந்தது

ஆனால் ரிச்சர்ட் அங்கு நிரந்தரமாக வாழாமல் அடிக்கடி சென்று தங்கி வந்துள்ளார்.

ஆர்டோலியன் தீவில் மின்சாரம் மற்றும் ஓடுகின்ற நீர்நிலை இல்லை. ஆனால், நவீனகாலக் கட்டிடம் ஒன்று மழைநீர் சேகரிப்புச் செயல்முறைகளோடு கட்டப்பட்டுள்ளது.

அந்தக் கட்டிடத்தை சுற்றுச்சூழலுக்கு மாசுகளை ஏற்படுத்தாத வகையில் மாற்றியமைக்க, வாங்கப்போகும் நபருக்கு உரிமை வழங்கப்படுகிறது.

இந்த தீவின் விலையாக 1.4 மில்லியன் டொலர்கள் நிர்ணயிக்கப்பட்டு நில விற்பனைச் சந்தைகளில் விளம்பரத்துக்கு விடப்பட்டுள்ளது.

இந்த தீவுகளில் விலங்குகள் இல்லையென்ற போதும் பல்வேறு பறவைகள் வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்