லண்டனில் கத்திக்குத்து தாக்குதல்: 7 பேர் காயங்களுடன் மீட்பு... 3 ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைவு!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

மேற்கு லண்டன் பகுதியில் உள்ள உணவகத்தில் இரண்டு நபர்கள் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 7 பேர் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேற்கு லண்டன் அருகே Southall பகுதியில் இயங்கி வரும் உணவகம் ஒன்றில் உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்கு கத்தி குத்து தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார் 20 வயதுள்ள இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தாக்குதலில் இதுவரை 7 பேர் காயமடைந்திருப்பதாகவும், அவர்களில் 3 பேர் தற்போது மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

தாக்குதலில் ஈடுபட்டதாக 2 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் தாக்குதல் இரண்டு குழுவினருக்கு இடையில் நடைபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெற்கு பிராட்வேயில் கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றுள்ளது கவலையை அளிக்கிறது. இதுதொடர்பாக செய்திகளை பொலிஸாரிடம் தொடர்ந்து கேட்டு வருகிறேன் என உள்ளூர் எம்.பி. விரேந்திர ஷர்மா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தாக்குதலை தொடர்ந்து உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும், காயமடைந்தவர்களுக்கு 3 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்