லண்டனில் தீவிரவாத சம்பவமா? கத்தியால் குத்துவதற்கு முன் உரக்க கூறிய வார்த்தை

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

லண்டனின் Stanwell நகரில் இரவு 10.30 மணியளவில 50 வயதான நபர் ஒருவர் இனவெறி ரீதியாக உரக்க கத்திக்கொண்டு 19 வயது வாலிபரை தாக்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

50 வயது நபரை கைது செய்துள்ள பொலிசார் இது தீவிரவாத தாக்குதலின் பின்னணியா என சந்தேகம் கொண்டுள்ளனர்.

Tesco கார் நிறுத்தம் அருகே நின்றுகொண்டிருந்த 19 வயது வாலிபரின் அருகில் சென்ற குறித்த நபர், நீ சாகப்போகிறாயா.....நீ இப்போது சாகப்போகிறாய். அனைத்து முஸ்லீம்களும் செத்துமடிய வேண்டும். நான் அனைத்து முஸ்லீம்களை கொல்ல போகிறேன் என உரக்க கத்திக்கொண்டே தனது கையில் வைத்திருந்த பேஸ்பால் பேட் மற்றும் கத்தியை கொண்டு அந்த வாலிபரை தாக்கியுள்ளார்.

இதில், காயமடைந்த அந்த வாலிபர் சரிந்துவிழுந்துள்ளார். மேலும், குறித்த நபர் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த சில கார்களையும் அடித்து சேதப்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து, அங்கிருந்தவர்கள் பொலிசிற்கு புகார் தெரிவித்ததையடுத்து விரைந்து வந்த காவல்துறை அந்த நபரை கைது செய்துள்ளனர்.

நியூசிலாந்து துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து லண்டனில் இப்படி ஒரு இனவெறி ரீதியான சம்பவம் நடைபெற்றுள்ளதாக அப்பகுதிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...