மிகச்சிறிய வயதில் விமானியாகி சாதனை படைத்துள்ள பிரித்தானிய இளம்பெண்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவின் பிரபல விமான நிறுவனம் ஒன்று, பதினாறே வயதான இளம்பெண் ஒருவரை தனது நிறுவனத்தில் விமானியாக பணிக்கு சேர்த்துள்ளது.

இவர்தான் பிரித்தானியாவிலேயே குறைந்த வயதுள்ள விமானி என்று கருதப்படுகிறது. Ellie Carter என்னும் அந்த இளம்பெண், ஜனவரி மாதம் தனது 16 ஆவது பிறந்த நாள் முடிந்து மூன்றே நாட்கள் ஆன நிலையில், ஒரு எளிய வகை விமானம் ஒன்றை தனியாக இயக்கியதையடுத்து இந்த முடிவை அந்த விமான நிறுவனம் எடுத்துள்ளது.

அது மட்டுமின்றி, இன்னும் பல இளம்பெண்கள் விமானி பணிக்கு வரவேண்டும் என்பதை ஊக்குவிப்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Ellie Carterக்கு தொடர்ந்து மூத்த பெண் விமானி ஒருவரால் பெரிய விமானங்களை இயக்கவும் பயிற்சியளிக்கப்படும்.

சிறு வயது முதலே விமானம் ஓட்டுவதில் ஆர்வம் கொண்ட Ellie, பறப்பது தன்னை ஆச்சரியப்படுத்துவதாக தெரிவிக்கிறார்.

அவருக்கு பயிற்சியளிக்கும் Zoe Ebrey என்னும் மூத்த விமானி, இத்தகைய ஆர்வமுடைய இளம் விமானியை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவிக்கிறார். உலகத்திலேயே மொத்தம் ஐந்து சதவிகிதம் பெண்கள் தான் விமானிகளாக பணி செய்வது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers