நியூசிலாந்து தீவிரவாதத்திற்கு ஆதரவு தெரிவித்த பிரித்தானியர்கள்: பொலிசார் அதிரடி

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

கடந்த 15 ஆம் திகதி நியூசிலாந்தின் இரண்டு மசூதிகளில் தீவிரவாதி நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் 50 பேர் பலியானது உலக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரித்தானியாவை சேர்ந்த 4 பேர் இதற்கு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

50 பேர் உயிரிழந்துள்ளதற்கு நியூசிலாந்து பிரதமர் உட்பட உலக நாடுகளை சேர்ந்த பல்வேறு மக்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிரித்தானியாவை சேர்ந்த இளைஞர் உட்பட நான்கு பேர் இந்த தீவிரவாத சம்பவத்திற்கு ஆதரவு தெரிவித்து பேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ளனர்.

இனவெறி ரீதியிலான இந்த கருத்து நாட்டுக்கு ஏற்புடையதல்ல என மான்செஸ்டர் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களின் ஒரு பெண்ணும் அடங்குவார். இவர் தனது சமூகவலைதளத்தில், ஒரு பக்கம் அளிவிற்கு ஆதரவு தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளார். இவர் பொலிஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இருந்துகொண்டு இப்படியான வெறுக்கத்தக்க மற்றும் அவமதிப்பு கருத்துக்களை தெரிவிப்பது வியப்பாக இருக்கிறது, அதோடு இதுபோன்ற கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என கிரேட்டர் மான்செஸ்டருக்கான உதவி தலைமை கான்ஸ்டபிள் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்