கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு கடந்தாண்டு மட்டும் பிரித்தானியாவில் நடந்த குற்றங்கள்: அதிரவைத்த புள்ளிவிபரம்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் கடந்த 10 ஆண்டுகளில், கடந்தாண்டு தான் கத்தியை வைத்து நடத்தப்பட்ட குற்றங்கள் மிக அதிகம் என தெரியவந்துள்ளது.

லண்டன் உட்பட பிரித்தானியாவின் பல பகுதிகளில் கத்தியை வைத்து நடத்தப்படும் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.

இது தொடர்பான புள்ளிவிபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்தாண்டு மட்டும் கத்தி, பிளேடு போன்ற ஆயுதங்களை வைத்து 21484 குற்றங்கள் பிரித்தானியா மற்றும் வேல்ஸில் நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

கத்தியை வைத்து மிரட்டியதும் இதில் அடக்கமாகும். 2009-க்கு பிறகு இந்த எண்ணிக்கை மிக அதிகமானதாகும்.

இதில் ஐந்து குற்றவாளிகளில் ஒருவர் சிறார் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

இதில் மூன்றில் இரண்டு மடங்கு சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு உடனடியாக சிறை தண்டனை கிடைக்கவில்லை என தெரியவந்துள்ளது.

இது போன்ற குற்றங்களை சமாளிக்க £100 மில்லியன் நிதியை காவல் துறைக்கு சான்சிலர் பிலிப் ஹமூண்டு ஏற்கனவே ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்