லண்டனில் மக்கள் குவிந்த இசை நிகழ்ச்சியில் மூன்று பேருக்கு கத்திக்குத்து... வெளியான பின்னணி தகவல்

Report Print Raju Raju in பிரித்தானியா

தெற்கு லண்டனில் ராப் இசை நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் நடந்த சண்டையில் மூன்று பேருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

Electric Brixton என்ற இடத்தில் பிரபல ராப் பாடகர் ரோடி ரிச் நடத்திய இசை நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது.

அந்த சமயத்தில் அங்கிருந்த சிலருக்குள் திடீரென சண்டை ஏற்பட்டது.

இதில் மூன்று பேர் கத்தியால் குத்தப்பட்டனர். அப்போது மேடையில் பாடகர் ரோடி இசை நிகழ்ச்சி நடத்தி கொண்டிருந்தார்.

கத்திக்குத்து சம்பவத்தால் அந்த இடம் பரபரப்பான நிலையில் பொலிசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

உள்ளூர் நேரப்படி இரவு 10.30 மணிக்கு பொலிசார் அங்கு வந்த நிலையில் கத்திக்குத்துப்பட்ட 20களில் உள்ள மூவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து அந்த இடத்தில் இருந்த மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

கத்திக்குத்துப்பட்ட ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுவதாகவும், மற்ற இருவர் உயிருக்கு ஆபத்தில்லை என்றும் கூறப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதில் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்ட இளைஞர் உட்பட மூவரும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers