தொல்லை கொடுத்து வந்த தனது குடும்பம் தொடர்பில் மேகன் எடுத்துள்ள முக்கிய முடிவு!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

தொடர்ந்து பிரித்தானிய இளவரசி மேகனை நிம்மதியிழக்கச் செய்யும் அளவிற்கு தங்கள் பேட்டிகளால் தொல்லை கொடுத்து வந்த அவரது குடும்பத்தினருடன் சமாதானம் ஆக மேகன் முடிவு செய்துள்ளதாக அவரது நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தனது புகைப்படங்கள் பத்திரிகைகளில் வருவதற்காக மேகனின் தந்தை தாமஸ் மெர்க்கல் அடித்த ஸ்டண்ட், எப்போதும் மேகனை மோசமாக திட்டும் அவரது அக்கா சமந்தா, சம்பந்தமே இல்லமல் திடீரென தலை காட்டி விமர்சனம் செய்யும் ஒரு கசின் என மேகனுக்கு பெரும் தலைவலியாகவே இருந்தது அவரது குடும்பம்.

அதுவும், அவர் ஒரு நடிகையாக தன்னை நிரூபிக்க பாடுபட்ட காலங்களில் அவருக்காக பெரிதாக எதையும் செய்யாத அவரது குடும்பத்தினர், அவர் எப்போது இளவரசர் ஹரியை மணந்தாரோ அப்போதிருந்து அவர் மீது அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்தனர். ஒரு இளவரசி என்ற முறையில் மேகனுக்கு பொறுப்புகள் ஏராளம்.

அவரை நம்பி பிரித்தானிய மகாராணியே ஒப்படைத்த பொறுப்புகள், தொண்டு நிறுவனங்கள், அரசு முறை சுற்றுப்பயணங்கள், நிறைமாத கர்ப்பிணி வயிற்றையும் தூக்கிக் கொண்டு அவர் அலையும் அலைச்சல்கள் என எப்போது அவர் பிஸியானாரோ, அப்போது அவரது தாய் தவிர்த்து அவரது குடும்பம் அவருக்கு ஏற்படுத்திய எரிச்சல்கள் ஏராளம்.

இப்படி அலைக்கழிக்கப்பட்ட மேகன் தற்போது ஒரு முக்கிய முடிவு எடுத்துள்ளார். அதாவது தனது குழந்தை பிறந்ததும் தனது குடும்பத்தினருடன் சமாதானமாக போக முடிவு செய்துள்ளார் மேகன்.

தன்னை விமர்சித்த அக்கா சமந்தாவும் இந்த பட்டியலில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers