பெண்கள் வாழ்வதற்கு பாதுகாப்பான டாப் 10 நாடுகள்..பிரித்தானியாவிற்கு எத்தனாவது இடம் தெரியுமா?

Report Print Santhan in பிரித்தானியா

இன்று உலக மகளிர் தினம். ஆண்டு தோறும் மார்ச் மாதம் 8-ஆம் திகதி உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும்.

ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது என்றே குறிப்பிட வேண்டும். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

உலக தலைவர்கள் பலரும் மகளின் தின வாழ்த்துக்களையும், பெண்களின் முக்கியதுவத்தையும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் மகளிர் தினமான இன்று உலகில் பெண்கள் நிம்மதியாகவும், தாங்கள் வாழ்வதற்கு சந்தோஷமாக இருக்கும் நாடுகள் எது என்பது பற்றி கூறியுள்ளனர்.

அதில் அவர்கள் தங்களுக்கு இங்கு தங்களுக்கு சமமான உரிமை கொடுக்கப்படுவதாகவும், எங்களுக்கென்று பாதுகாப்பை உணர்வதாகவும், வாழ்வதற்கு சிறந்த நாடு என்று கூறியுள்ளனர்.

அதில் கொடுக்கப்பட்ட 10 புள்ளிகளில் நார்வே 8.7 புள்ளிகளில் முதல் இடத்திலும், ஸ்வீடன் 8.4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், கனடா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

View this post on Instagram

The U.S. and Britain have a lot of catching up to do when it comes to the welfare of female employees. The two largest English-speaking economies are 23rd and 13th respectively in an annual ranking by PricewaterhouseCoopers. Nordic nations held five of the top 10 places. The list covers the representation and welfare of women in the workplace across 33 countries belonging to the Organization for Economic Cooperation and Development. The U.S. has fallen 14 places since 2000 - when this survey started - as full-time female employment declined, PwC says. And Britain's gender pay gap remains a key factor in the lack of progress, especially in London, where it's "barely budged" since 2010, according to the report.

A post shared by Bloomberg (@bloombergbusiness) on

மேலும் முதல் மூன்று இடங்களில் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகள் இடம் பிடிக்கவில்லை, ஆனால் அதே சமயம் பெண் வேலை பார்க்கும் இடங்களில் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்ற வரிசையில் ஐஸ்லாந்து முதல் இடத்திலும், ஸ்வீடன் இரண்டாவது இடத்திலும், நியூசிலாந்து மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இதில் கனடா 11-வது இடத்தையும், பிரித்தானியா 13-வது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்