இன்றே இதை செய்திடுங்கள்! பிரித்தானியர்களுக்கு Brexit தொடர்பில் ஓர் எச்சரிக்கை தகவல்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

ஒப்பந்தங்கள் அற்ற பிரெக்சிட் நிறைவேறும் பட்சத்தில், ஐரோப்பாவில் தடையின்றி பயணிக்க வேண்டுமானால், தங்கள் பாஸ்போர்ட்களை இன்றைகுள் புதுப்பித்துக் கொள்ளுமாறு சுமார் 3.5 மில்லியன் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 29ஆம் திகதி பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும்பட்சத்தில், தாங்கள் பயணம் மேற்கொண்டு சென்றிருக்கும் நாட்டிற்கு வந்த நாளிலிருந்து, தங்கள் பாஸ்போர்ட்கள் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் செல்லத்தக்கதாக இருக்கவேண்டியது அவசியம்.

அப்படி இல்லையென்றால், பயணிப்பதிலிருந்து அவர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள், அல்லது பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகள், கிரீஸ் மற்றும் இத்தாலி ஆகிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எல்லையிலிருந்து திருப்பி அனுப்பப்படுவார்கள்.

15 மாதங்கள் வரை தங்கள் பாஸ்போர்ட்டில் வைத்திருப்பவர்கள்கூட ஐரோப்பாவின் பல பிரபல சுற்றுலாத்தலங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவார்கள் என்றும் ஒரு செய்தியும் வெளியாகியுள்ளது.

எனவே இந்த 3.5 மில்லியன் பேரும் வெள்ளிக்கிழமைக்குள் (இன்றைக்குள்) தங்கள் பாஸ்போர்ட்களை புதுப்பித்துக் கொள்ளும்படி எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.

இதனால் அச்சமுறும் பிரித்தானியர்கள் பாஸ்போர்ட் அலுவலகத்தை படையெடுப்பார்கள் என்பதால் இன்று பாஸ்போர்ட் அலுவலகம் நிரம்பி வழியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...