பிரித்தானியாவில் அடுத்தடுத்து 3 முக்கிய இடங்களில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு! பீதியில் பொதுமக்கள்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்திலும், லண்டன் சிட்டி விமான நிலையத்திலும், வாட்டர்லூ நிலையத்திலும் வெடிகுண்டுகளைக் கொண்ட மூன்று பொதிகளைக் கண்டறிந்து பயங்கரவாத பொலிஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரித்தானியாவில் உள்ள ஹீத்ரோ விமான நிலையம், லண்டன் சிட்டி விமான நிலையம் மற்றும் வாட்டர்லூ ரயில் நிலம் அருகே, 2 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து மூன்று வெடிகுண்டுகளைக் கொண்ட பொதிகளை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த சிறப்பு அதிகாரிகள், அங்கிருந்த பொதுமக்கள் அனைவரையும் அப்புறப்படுத்திவிட்டு பாதுகாப்பான ஒரு அறையில் வைத்து திறந்தனர்.

அப்பொழுது திடீரென தீ பற்றி ஏறிய ஆரம்பித்துள்ளது. ஆனால் பெரிதளவில் எதுவும் பாதிப்பு ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்ம், உள்ளூர் நேரப்படி காலை 9.55 மணிக்கு ஹீத்ரோ விமான நிலையம் அருகே முதல் பொதிகை கன்டுபிடிக்கப்பட்டுள்ளது. 11.40 மணிக்கு வாட்டர்லூ ரயில் நிலையத்திலும், அடுத்த அரைமணிநேரத்தில் லண்டன் சிட்டி விமான நிலையத்திலும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் பொதுமக்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இது ஒரு பயங்கரவாத அச்சுறுத்தலாகவே கருதப்படுகிறது. அப்படி இல்லையென்றால் மர்ம நபர்கள் திசைதிருப்புவதற்காக இதனை பயன்படுத்தியிருக்கலாம்.

மூன்று பொதிகைகளிலும் அயர்லாந்து அரசால் உபயோகப்படுத்தப்படும் இதய வடிவிலான தபால் முத்திரை உள்ளது. தற்போது அயர்லாந்து அதிகாரிகளும் எங்களுடைய விசாரணைக்கு உதவி வருகின்றனர். பொதுமக்கள் அனைவரும் இங்கிருந்து வெளியேற்றப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

மேலும், பொதுமக்கள் யாரும் அஞ்ச வேண்டாம் எனவும் பலத்த பாதுகாப்பில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

தற்போது அதிகமான ஆயுதமேந்திய பொலிஸார் பணியில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers