எய்ட்ஸ் நோயில் இருந்து முற்றிலும் குணமடைந்த லண்டன் நபர்: மருத்துவ உலகில் புதிய சாதனை

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

உலகிலேயே குணமாக்க முடியாத நோய் என்று மருத்துவ உலகத்தால் அறிவிக்கப்பட்ட எய்ட்ஸ் நோயில் இருந்து லண்டனை சேர்ந்த ஒருவர் குணமாகியுள்ளது மருத்துவ துறையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Mutation எனப்படும் திடீர் மரபியல் மாற்றத்தால் சிலருக்கு எச்ஐவி வைரஸை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு ஆற்றல் உடலில் உருவாகிறது.

அத்தகைய நபரின் எலும்பு மஜ்ஜையில் ஸ்டெம்செல் செலுத்தி அந்த செல்களை எச்ஐவியால் பாதிக்கப்பட்ட நபர் கடந்த 3 ஆண்டுகளாக பெற்று வந்துள்ளார்.

antiretroviral மருந்து அந்த ஸ்டெம் செல்லில் தொடர்ந்து செலுத்தப்பட்டு வந்த நிலையில் பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட நபர் முற்றிலும் குணமடைந்துள்ளார்.

இந்த நபர் குணமடைந்துள்ளார் என்பதற்காக எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என உறுதியாக கூறிவிடமுடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

2007 ஆம் ஆண்டில் ஜேர்மனை சேர்ந்த Brown என்ற நபருக்கு எய்ட்ஸ் நோய் குணப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது லண்டன் நபர் குணமடைந்துள்ளது உலகில் இரண்டாவதாக நிகழ்த்தப்பட்டுள்ள மருத்துவ சாதனை ஆகும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்