13 மாத கைக்குழந்தையை காப்பாற்ற தீயில் குதித்த தந்தை பரிதாப பலி: நெஞ்சை உருக்கும் சம்பவம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் தீயில் சிக்கிய 13 மாத கைக்குழந்தையை காப்பாற்றுவதற்காக தீயில் குதித்து பலத்த காயமடைந்த தந்தை, 10 நாட்களுக்கு பின் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்காட்லாந்தை சேர்ந்த நீல் தாம்சன் (35) - நடாலி (31) தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சனிக்கிழமையன்று இவர்களுடைய வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

உடனே நடாலி முதல் தளத்தில் இருந்த ஜன்னல் வழியே வேகமாக குதித்து தப்பியுள்ளார். அதேசமயம் மெத்தையில் உறங்கிக்கொண்டிருந்த தங்களுடைய 10 மாத கைக்குழந்தையை காப்பற்றுவதற்காக, தாம்சன் தீயின் நடுவே சென்று குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியில் வந்துள்ளார்.

இதில் இருவருமே பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் தாம்சன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் கவலை தெரிவித்துள்ள நடாலி, கணவனும் என்னுடைய மூன்று குழந்தைகள் மட்டுமே எனக்கு உலகம் என பதிவிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்