டயானாவிற்கு முன் 20 பெண்களுடன் டேட்டிங் சென்ற இளவரசர் சார்லஸ்: வெளியான சுவாரஸ்ய தகவல்கள்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

டயானாவை திருமணம் செய்வதற்கு முன்பு இளவரசர் சார்லஸ் ஒரு பெண்ணை உருகி உருகி காதலித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரித்தானிய இளவரசர் சார்லஸ் 1981 ஆம் ஆண்டு டயானாவை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அதற்கு முன்பாக 20 பெண்களுடன் டேட்டிங் சென்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு நல்ல மனைவியை கண்டறிவதற்கான அதிக அழுத்தங்கள் இளவரசர் சார்லஸிற்கு கொடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாகவே இளவரசி டயானாவை கண்டறிவதற்கு முன் பல பெண்களுடன் சார்லஸ் டேட்டிங் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது.

டயானாவிற்கு முன்னதாக அன்னா வாலஸ் மீது இளவரசர் சார்லஸிற்கு அதிக ஈர்ப்பு இருந்துள்ளது. அவரிடம் இருமுறை காதலை கூறியும் கூட, அன்னா வாலஸ் அதனை ஏற்க மறுத்திருக்கிறார்.

ராணியின் 80-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, அன்னாவை சரியாக கவனித்துக்கொள்ளாததால் பெரும் மனஉளைச்சலில் சார்லசுடன் சண்டையிட்டு தன்னுடைய உறவை முடித்துக்கொண்டுள்ளார்.

பின்னர் ஜானி ஹெஸ்கெட்டை என்பவரை திருமணம் செய்துகொண்ட அன்னா, அவரையும் விவாகரத்து செய்துள்ளார்.

இதற்கிடையில் சார்லஸ் டயானாவின் சகோதரி லேடி சாரா ஸ்பென்சரைக் காதலித்திருக்கிறார். 1977 ஆம் ஆண்டில் அவர்களது சுருக்கமான உறவு பற்றி அதிகம் அறியப்படவில்லை. ஆனால் தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற சாராவின் நேரலை நிகழ்ச்சிக்கு பின்னர் அவர்களுடைய உறவும் முறிந்துவிட்டது.

ஆனால் சாரா இன்னும் அவருடைய தங்கையின் மகன்கள் வில்லியம் மற்றும் ஹரியுடன் தன்னுடைய உறவை தொடர்ந்து வருகிறார். இறுதியாக ஹரி - மேகன் திருமணத்தில் கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்