நாளொன்றிற்கு அரை லிற்றர் சிறுநீர் குடிக்கும் பிரித்தானியர்! இவ்வளவு ஆரோக்கியமாக உணர்ந்ததே இல்லையாம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

மூன்றாண்டுகளாக தனது சிறுநீரை குடித்து வரும் பிரித்தானியர் ஒருவர், இதற்கு முன் இவ்வளவு ஆரோக்கியமாக உணர்ந்ததே இல்லை என்கிறார்.

ஷெஃப்பீல்டைச் சேர்ந்த Fabian Farquharson (37), நாளொன்றிற்கு 300 முதல் 400 மில்லிலிற்றர் சிறுநீரைக் குடித்துதான் தனது நாளை துவங்குவதாக தெரிவித்துள்ளார்.

மாற்று மருத்துவம் குறித்து ஆராய்ந்து கொண்டிருந்த நான், சிறுநீர் குடிப்பதைப் பற்றி கேள்விப்பட்டேன்,அப்போதே அதை முயற்சி செய்ய முடிவு செய்து விட்டேன் என்கிறார் Fabian.

சிறுநீரைக் குடித்து அரை மணி நேரமானதுமே எனக்கு அருமையான ஆற்றல் கிடைப்பதை உணர முடிந்ததால், இப்போது ஒரு நாள் கூட அதை தவற விடுவதோ அல்லது மற்றவர்களுக்கு பரிந்துரை செய்யத் தவறுவதோ இல்லை என்கிறார் Fabian.

2013ஆம் ஆண்டு Fabianக்கு அடிக்கடி வயிற்று வலி வர ஆரம்பித்தது.

மருத்துவர்களால் அவரது பிரச்சினைக்கு தீர்வு எதையும் காண இயலாததால், மாற்று மருத்துவம் குறித்த ஆராய்ச்சியில் இறங்கிய Fabian, சிறுநீர் அருந்தும் முறையைப் பற்றிக் கேள்விப்பட்டு அதை முயற்சி செய்து பார்த்திருக்கிறார்.

இப்போது தான் மிகவும் ஆரோக்கியமாக உணர்வதாகவும் தெரிவிக்கிறார் Fabian.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்