இரண்டு பேரை உயிராக காதலிக்கும் இளம்பெண்: ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் காரணம் என்ன தெரியுமா?

Report Print Raju Raju in பிரித்தானியா

இளம் பெண்ணொருவர் தனது காதலரை கரம் பிடித்த நிலையில், இன்னொரு பெண் மீதும் அவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டதால் மூவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வருகிறார்கள்.

அமெரிக்காவின் Ohio மாகாணத்தை சேர்ந்தார் கராலின் ஹென்ரி (22). இவருக்கு ஜஸ்டின் என்பவர் சிறுவயதிலிருந்தே நண்பராவார்.

இந்நிலையில் லனா என்ற பெண்ணுடன் சமூகவலைதளம் மூலம் கராலினுக்கு நட்பு ஏற்பட்டது.

இதையடுத்து சமீபத்தில் கராலின் - ஜஸ்டின் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்துக்கு லனாவும் வந்திருந்தார்.

திருமணத்துக்கு பின்னர் லனாவுடன் மிகவும் நெருக்கமாக பழக தொடங்கினார் கராலின், அவர் பெண் என்பதையும் மீறி அவர் மீது காதல் கொண்டார்.

அதாவது Polyamorous எனப்படும் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் மீது காதல் வயப்பட்டு அவர்களுடன் வாழும் முறையை தானும் வாழ விரும்பினார் கராலின்.

அதன்படி தனது விருப்பத்தை கணவர் ஜஸ்டின் மற்றும் லனாவிடம் சொன்னார்.

இதன் பின்னர் லனாவும், ஜஸ்டினும் நட்பு பாராட்டி ஒருவருக்கொருவர் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள் ஆனார்கள்.

இதையடுத்து அயர்லாந்தை சேர்ந்த லனா, ஜஸ்டின் மற்றும் கராலின் ஆகிய இருவருடனும் சேர்ந்து ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.

மூவரும் ஒருவர் மீது ஒருவர் அதிக அன்பு வைத்துள்ளதால் ஒரே வீட்டில் தங்கியுள்ளனர்.

தன்னுடைய சொந்த நாட்டுக்கு லனா அடிக்கடி சென்றாலும், மீண்டும் இங்கு வரும் போது அவர்களுடன் தங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இது குறித்து கராலின் கூறுகையில், Polyamorous எனப்படும் விடயத்தை எனக்கு 17 வயதாக இருக்கும் போதே உணர்ந்தேன்.

ஆண்கள் மீது எப்படி ஈர்ப்பு ஏற்படுமோ, அதே போல பெண் மீதும் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது.

இந்த விடயத்தை சமுதாயத்தில் பலர் ஏற்று கொள்ள மாட்டார்கள்.

இப்படி இருவருடன் நான் வாழ்வதை தவறு என்றும், இது ஏமாற்று வேலை என்றும் விமர்சனம் செய்வார்கள்.

ஆனால் இது குறித்து எனக்கு கவலையில்லை என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்