பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானியாவின் Cornwall பகுதியில் ஒரு மணிநேரத்திற்கு 87 mph மைல் தொலைவிற்கு அழுத்தமான காற்று வீசியுள்ளது பதிவாகியுள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Storm Freya's என்ற இந்த காற்று அசுர வேகத்தில் இருந்ததால் கார்கள் சேதமடைந்தன, மரங்கள் மற்றும் அடிபட்ட கட்டிடங்களை தகர்த்தெறிந்துள்ளது.

இந்த வாரம் முழுவதும் காற்றழுத்தம் இருக்கும் என்றும் அப்படி வடக்கு இங்கிலாந்துக்கு Storm Freya's காற்று நகரும் என கூறப்பட்டுள்ளது.

பிரிட்டன் ஃபெரி பாலம் மற்றும் சவுத் வேல்ஸில் அமைந்துள்ள 41, 42 ஆகிய சந்திப்பு நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

ஆற்று தண்ணீர் அதிக கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதால் A465 சாலை மூடப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை 3 மணியிலிருந்து திங்கட்கிழமை காலை 6 மணி வரை அதிக காற்றழுத்தம் இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு இங்கிலாந்தின் சில பகுதிகளில் பனிப்பொழிவுக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது, வடகிழக்கு மிக மோசமாக பாதிக்கப்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மழை மற்றும் அதிக காற்றழுத்தம் காரணமாக M4 சாலையில் இரண்டு விபத்துகள் நிகழ்ந்தன, ஸ்வான்சீ மற்றும் பிரிட்ஜெண்டில் லைன்கள் இதன் காரணமாக மூடப்பட்டுள்ளன.

சாலைகள் மற்றும் மரங்களுக்கு சேதம் ஏற்படலாம் என்றும் சாலை விபத்துக்கள், மின்சார நிறுத்தம் போன்றவை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூரைகளிலும், மரக்கிளைகளுக்கு அருகில் நிற்க வேண்டாம் மற்றும் கடலோரப் பகுதிகளிலும் இருக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்